SUBMISSIVE TO THE DIVINE WILL - தெய்வீக சித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்தார்

 


தெய்வீக சித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்தார்


SUBMISSIVE TO THE DIVINE WILL

The Scripture which declares, "Ye have killed the Just One, and He doth not resist you," and the Golden Text of this lesson are in full agreement and are both applicable to Jesus in these trials. Jesus opened not His mouth in the sense that He did not attempt to defend His life. Realizing that nothing was happening to Him contrary to the Father's will, He gladly permitted matters to take their course, without attempting to hinder the results.

Who can doubt that His brilliant mind, and His tongue, which "spake as never man spake," could quickly have brought such an argument for His defense that Caiaphas and the entire Sanhedrin would have trembled and would not have dared to condemn Him! He spoke only what was necessary to be said that the Truth might be presented, and it was their own perversion of this Truth which His enemies styled blasphemy.

The Scriptures intimate that the followers of Jesus must not expect full justice in the world, nor always to be rightly understood. They, too, are to remember that the cup of their experiences, like that of their Master, is supervised by Heavenly Wisdom; and that if they are obedient to the Divine arrangement, they will find that all of their experiences will eventually work out to their highest welfare. "We know that all things work together for good to those who love God."

Source Link 
தெய்வீக சித்தத்திற்கு கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்தார்

"நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து கொலை செய்தீர்கள் அவர்  உங்களோடே  எதிர்த்து நிற்கவில்லை " (யாக்கோபு 5;6) என்ற வசனத்தின் வார்த்தைகளும் மற்றும் நம்முடைய இப்பாடத்தின் ஆதார வசனத்தின் வார்த்தைகளும் முழு இசைவுடன் காணப்படுகிறது மற்றும் நம்முடைய இப்பாடத்தின் ஆதார வசனத்தின் வார்த்தைகளும் முழு இசைவுடனும் காணப்படுகின்றது மற்றும் இரண்டுமே, இவ்விசாரணையின் போது காணப்பட்ட இயேசுவுக்குப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இயேசு தம்முடைய ஜீவனைக் காத்துக்கொள்ள முற்படவில்லை என்ற விதத்தில் அவர் தம்முடைய வாயைத்  திறவாதவராய் காணப்பட்டார். பிதாவின் சித்தமில்லாத எதுவும் தமக்கு நிகழ்வதில்லை என்பதை இயேசு உணர்ந்தவராக, காரியங்களை அவர் தடைப்பண்ணிட முற்படாமல், காரியங்களை அவைகளின் போக்கிலேயே நடைபெறதக்கதாக மகிழ்ச்சியுடன் அனுமதித்தார்.

தம்மை தற்காத்துக்கொள்ளத்தக்கதாக, "எந்த மனிதனும் பேசாதது போல்" பேசின அவரது அறிவுள்ள மனமும், அவரது நாவும் வாதங்களை முன்வைத்ததானால், காய்பாவும், முழு ஆலோசனை சங்கத்தாரும் நடுங்கிப்போயிருப்பார்கள் என்பதிலும் அவரை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கத்  துணிந்திருக்கமாட்டார்கள் என்பதிலும் சந்தேகமில்லை! சத்தியம் முன் வைக்கப்படுவதற்கு, என்ன பேசப்படுவது அவசியமாய் இருந்ததோ, அதை மாத்திரமே இயேசு பேசினார்; மேலும் அவர் பேசின சத்தியத்தையே, அவரது சத்துருக்கள் தவறான விதத்தில் தேவதூஷணம் என்று கூறினார்கள்.

இயேசுவின் பின்னடியார்கள் உலகத்தினிடமிருந்து முழு நீதியையும், எப்பொழுதும் சரியாய் புரிந்துகொள்ளப்படுவதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று வேத வாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இவர்கள் தங்களது எஜமானைப் போன்றே, தங்களுக்கான அனுபவங்களின் பாத்திரமும் கூட, பரம ஞானத்தினால் மேற்பார்வையிடப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; இன்னுமாக தெய்வீக ஏற்பாடுகளுக்குத் தாங்கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருந்தால் தங்களுக்கான அனுபவங்கள் அனைத்தும் மேலான நன்மைக்கு ஏதுவாய் நடந்தேறுவதைத் தங்களால் காணமுடியும் என்பதையும் இவர்கள் நினைவில்கொள்ள வேண்டும் "அன்றியும் அவருடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கின்றோம் 
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கீழே உள்ள லிங்க் ஐ  கிளிக் செய்து புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் 
 

 நம்முடைய மூத்த சகோதரர் சார்லஸ் டேஷ் ரசல் அவர்களின் எழுத்துக்களின் சாரங்களின்  புகைப்பட வடிவத்தை அனுதினம் பெற்றுக்கொள்ள இந்த website  subscribe  செய்யுங்கள்.

 மேலும் நமது வேத மாணவர்களின் பாடல்களை youtube  இல் கேட்டு மகிழ கீழே உள்ள youtube  சேனல் ஐ subscibe  செய்து bell பொத்தானை அழுத்தி பாடல்களை கேட்டு மகிழுங்கள் 

தேவனுக்கே மகிமை 
ALL THE PRAISES GOES TO OUR HEAVENLY FATHER IN THE NAME OF JESUS

Comments